
கீழக்கரையில் மிகவும் பழமையான மற்றும் முக்கியஸ்தர்கள் முதல் வெளியூர் பயணிகள் வரை காண விரும்பும் இடம் மன்னர் காலத்தில் கலை அம்சத்துடன் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஆகும். ஆனால் இன்றைய ஆட்சியளர்களுக்கும், நகராட்சியாளர்களுக்கும் அதனுடைய பெருமை தெரியாத காரணத்தினாலோ என்னவோ அதனுடைய சுற்றுப்புற சுகாதாரம் எப்பொழுதும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. அவ்வப்போது அவ்வழியில் செல்வோர்கள் எல்லாம் முகம் சுழிக்கும் அளவுக்கு தெருவில் வெள்ளமாக ஊற்றெடுத்து ஓடும் கழிவு நீர், பின்னர் மக்களின் புகாருக்கு பிறகு தற்காலிகமாக சுத்தம் செய்தல், இதுதான் வாடிக்கை, கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இன்றைய காலை நிலவரம்.
இது சம்பந்தமாக பலமுறை, அதுவும் சமீபத்திலும் நிரந்த தீர்வு கோரி செய்தி வெளியட்டிருந்தோம். ஆனால் கழிவு நீர் பிரச்சினை எந்த நிரந்தர தீர்வும் இல்லாமல் தொடர்கதையாக நீண்டு கொண்டுதான் செல்கின்றது.
கீழக்கரை குத்பா பள்ளி தெருவின் அவல நிலை.. கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம்…
கீழக்கரை நடுத் தெருவில் வழிந்தோடும் சாக்கடை நதி – பொதுமக்கள் நிலை தடுமாறி நீந்தி செல்லும் அவலம்
You must be logged in to post a comment.