Home செய்திகள் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்திற்கு ஒருமைபாட்டிற்கான விருது வழங்குவதா?; நெல்லை முபாரக் கண்டனம்..

“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்திற்கு ஒருமைபாட்டிற்கான விருது வழங்குவதா?; நெல்லை முபாரக் கண்டனம்..

by ஆசிரியர்

மக்களிடம் வெறுப்பை விதைத்த “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்திற்கு தேசிய ஒருமைபாட்டிற்கான விருது வழங்குவதற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்காக, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. மக்களிடம் ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டிய சிறந்த படைப்புகள், கதை யதார்த்தங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு அளிக்க வேண்டிய விருதை, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக அவதூறை பரப்பி வெறுப்பை விதைத்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு விருதினை அளித்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் இது போன்ற வெறுப்பை உமிழும் கதைகளைக் கொண்ட திரைப்படங்களை ஊக்குவிக்கும் போக்கு மிக ஆபத்தானது. ஆகவே, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com