மண்டபம் அருகே வேதாளை பள்ளி 12 ஆம் ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை சேது வித்யாலயா 12 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். சேவா பாரதி மாவட்ட தலைவர் மதிசேகர பாண்டியன் தலைமை வகித்தார். சேது வித்யாலயா அறங்காவலர் முனியசாமி முன்னிலை வகித்தார். மண்டபம் ஒன்றிய நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி நல சங்க தலைவர் முகைதீன் பக்கீர், கெளரவ ஆலோசகர் முகமது இத்ரீஸ் சிறப்புரையாற்றினர். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு, கலை போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

சேவா பாரதி மண்டபம் ஒன்றிய தலைவர் பால்ராஜ், துணைத் தலைவர் நாகசுந்தரம், ஏழு கிராமத் தலைவர் தவசி முனியாண்டி, கிராம முக்கிய பிரமுகர் பஞ்சவர்ணம், கிராம முன்னாள் தலைவர் முருகையா, பாம்பன் சுவாமிகள் வித்யாலயா தாளாளர் குமரகுரு தாசன், மண்டபம் ஒன்றிய நர்சரி நல சங்க செயலாளர் ஜெபதுரை, எஸ்டி ஜேம்ஸ் நர்சரி பள்ளி தாளாளர் பெஸ்கி, தினார் நர்சரி பள்ளி தாளாளர் தர்மவேல், ஹாஜி யூசுப் நர்சரி பள்ளி தாளாளர் நூருல் கரீம் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றிய நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி நலச் சங்க பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.