சவுதி அரேபியாவில் நடைபெற்ற வாலிபால் போட்டி…

சவுதி அரேபியா ஜித்தாவில் இணைதள டாக்சி நிறுவங்கள் இணைந்து நடத்திய வாலிபால் போட்டி பனிமாலிக் விளையாட்டு மைதானத்தில் நேற்று (19/02/2019) நடைபெற்றது. இதில் பல்வேறு கிளப் அணிகள் கலந்த கொண்டு மோதின.

இறுதிப்போட்டியில் முதல் பரிசை பாகிஸ்தான் கிளப் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை அதிகமான கீழக்கரை வீரர்களை கொண்ட FRC (Friends Republic Club) என்ற கரீம் டாக்ஸி அணி வென்றது.

மேலும் Friends Republic Club ஐ சார்ந்த ராஜேஸ் விளையாட்டு நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். Friends Republic Club அணிக்ககு கீழக்கரையைச் சார்ந்த வடக்குத் தெரு ஹமீது ராஜா மற்றும் சாஹீல் அலியார் மற்றும் பஜரு ஆகியோர் விளையாடினார்கள் என்பது குறிப்பிடதக்கது.