Home செய்திகள் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவங்கியது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவங்கியது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சியையொட்டி இன்று காலை மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை முதலாம் கால யாக பூஜைதொடங்கியது. தொடர்ந்து சனி ப்ரீத்தி ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்டவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து மதியம் இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி ப்ரீத்தி ஹோமங்கள் நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிகார ராசிகளான மேஷம் ,ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு கடங்கள் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெறுகிறார். மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!