Home செய்திகள் ராமேஸ்வரம் மீனவர் 8 பேர் விடுதலை: மன்னார் நிதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர் 8 பேர் விடுதலை: மன்னார் நிதிமன்றம் உத்தரவு

by mohan

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டிச.6ல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஆல்வின் என்பவரது படகிலிருந்த மீனவர் 8 பேரை சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால் 8 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி சஜீத் உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து யடுத்து ராமேஸ்வரம் மீனவர் 8 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட மீனவர் 8 பேரும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்கப்படுகிறது.படகுக்கான விசாரணை 2024 ஜன. 24ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!