கடலாடி அருகே விளைநிலங்களில் அனுமதியின்றி மணல் கொள்ளை – முன்னாள் மன்ற தலைவரின் டிராக்டர் பறிமுதல் ….

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த ஓரிவயல் மற்றும் சவேரியார்பட்டினம் பகுதிகளிலுள்ள விளைநிலங்களில், அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளிவருதாக சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு வந்த தகவலையடுத்து, பரமக்குடி சார் ஆட்சியரின் உத்தரவின்பேரில் இன்று அப்பகுதிக்கு ரோந்து சென்ற கடலாடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி அவர்கள், அப்பகுதியில் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை மடக்கி சோதனை செய்தார்.

அச்சோதனையின் போது அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. பின்னர் மணல் கொள்ளையில் ஓரிவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்து கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.