இராமேஸ்வரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழச்சி..

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 30 வது சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை கொண்டாடப்படுகிறது. “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற பொன்மொழிக்கேற்ப ராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என். காமினி உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் அறிவுறுத்தல்படி சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதன்படி, இன்று ( 04.02.2019 ) தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முனைவர் எஸ்.வெள்ளைத்துரை, ராமேஸ்வரம் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், துணை கண்காணிப்பாளர் (மாவட்ட குற்றப் பதிவேடு கூடம்) முத்துராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன்

#Paid Promotion