பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் திடீரென தீவிபத்து ….

பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள சரவணபவன் என்ற தனியார் உணவகத்தில் இன்று காலை சமையல் செய்யும் போது எண்ணெய் குழாயில் கசிவு ஏற்ப்பட்டு திடிரென தீப்பிடித்து தீ மலமலவென எரிய ஆரம்பித்ததும் அருகில் உள்ளவர்கள் மற்றும் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

மேலும் தீயை அணைக்க வேண்டும் என்று அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றினாலும் தீயை அணைக்க முடியவில்லை.  உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புபடையினர்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். உணவகத்தில் நிறைய சிலிண்டர்கள் இருந்ததாலும் அருகில் குடியருப்பு வீடுகள் இருந்ததாலும் இவ்விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியது.

பழனி செய்தியாளர்:-ரியாஸ்.