கீழக்கரையில் மக்கள் சேவையில் களம் இறங்கிய “சாலை வெல்ஃபேர் அசோசியேசன்”.

கீழக்கரை நகர் வளர்ச்சிக்கு என்றுமே அரசாங்கத்தை நம்பி இருந்தது இல்லை என்பதற்கு அடையாளமே அங்கு சமூக பணிகள் புரிந்து வரும் எண்ணற்ற சமூக நலச் சங்கங்களே.

அந்த நல்நோக்கோடு இன்று அந்த வரிசையில் இணைந்துள்ளது “சாலை வெல்ஃபேர் அசோசியேசன் “. சமீபத்தில் சமூக பணிகளை தொடங்கிய இவ்வமைப்பின் அதிகாரபூர்வமான அலுவலகம் இன்று (07-01-2018) காலை 11.30 மணியளவில் 13/26, சாலை தெரு என்ற முகவரியில் ஆரம்பம் செய்யப்பட்டது.

இந்த அமைப்பு மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, அரசாங்க அலுவலக உதவி, ஜனாசா அடக்கம் செய்வதற்கான பொருள் உதவி, விதவைப் பெண்களுக்கு பொருளாதார உதவி போன்ற திட்டங்களை அறிவித்து, அதன் ஆரம்ப கட்ட செயல்பாடுகளும் தொடங்கிவிட்டன.

இந்த அலுவலகத்தின் தொடக்க விழாவில் கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இத்தருணத்தில் சாலை வெல்ஃபேர் அசோசியேசன் சமூக சேவை சிறக்க கீழைநியூஸ் நிர்வாகம் மனமார வாழ்த்துகிறது.

புகைப்படத்தொகுப்பு