வீயனூர் ஊராட்சி அலுவலகம் அருகே சாலையில் சிதறி கிடக்கும் கழிவுகள்..வீடியோ ..

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பகுதியை சார்ந்த காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வீயனூர் ஊராட்சி அலுவலகம் அருகில், சுவாமியார் மடம், வேர் கிளம்பி சாலையில் மட்காத கழிவுகளான பாலித்தீன் கழிவுகளும், மருத்துவமனை கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் இரவு நேரங்களிலும் அதிகாலையும் ஊர் மக்களுக்கு தெரியாமல் சில சமூக விரோதிகள் கொட்டுவது வழக்கமாக இருந்து வருகின்றனர். இதை அந்த ஊர் இளைஞர்கள் அகற்றுவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்று (17/12/2018) அப்படி கொட்டப்பட்ட கழிவுகள் மேலே உள்ள வீடியோவில் உள்ளது. அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளை தெரு நாய்கள் இழுத்து நடு ரோட்டில் போடுவதும், வாகனங்கள் செல்லும் போது இடையூறாகவும் அந்த பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் நிரம்பி, பாலித்தீன் பைகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும், பல்வேறு விதமான நோய் தொற்றும் அபாயமும் உள்ளது.

மேலும் இந்த பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வயல் நிலங்களை பாழ்படுத்துகிறது, மாமிச கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது, மேலும் மாநில பிரதான சாலையில் கடந்த செல்வோர்  மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஆகவே சம்பந்தபட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்.