ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒருவரின் மீட்டரை வேறொருவருக்கு பொருத்தி மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பரக்கத் வீதியில் உள்ள ஜமால்தீன் என்பவரின் வீட்டிற்கு ஏற்கனவே ஓர் இணைப்பு (எண் C-349)மின்னிணைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது எனது வீட்டிற்கு 3 PHASE மின் இணைப்பிற்காக விண்ணப்பித்து அதற்கான கட்டணமும் செலுத்தி மார்ச் மாதம் ஒரு எண்ணை (3 PHASE NO C-1554) கொடுத்தார்கள்.மின் இணைப்பை கொடுத்த உடனேயே ரூபாய் 5264 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். அந்த எண்ணிற்கு நான் மின் கட்டணம் செலுத்த மின்சார அலுவலகத்திற்கு சென்றபோது, அந்த எண் பாப்பா என்ற வேறோரு நபரின் பெயரில் இருந்தது. ஆனால் அதற்கான கட்டணத்தை நீங்கள்தான் செலுத்த வேண்டும் என்று புதிதாக மீட்டர் பொருத்திய வீட்டு உரிமையாளரை நிர்ப்பந்தித்தார்கள். அந்த மின் இணைப்பு எண் உங்களுக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள்தான் அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியதால் அவரும் வேறு வழியின்றி ரூபாய் 5264 யிணை செலுத்திவிட்டார். மின் கட்டணம் செலுத்திய பிறகு பாப்பா என்ற பெயரில் ரசீதும் வழங்கி இருக்கிறார்கள். அனால் இன்றுவரை பாப்பா என்ற பெயரில் ஜமாலுதீன் என்பவரது வீட்டில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து வீடு உரிமையாளர் ஜமாலுதீன் அவர்கள் கூறுகையில் நான் ஜமாலுதீன் என்ற பெயரில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன், இதற்காக வீட்டு வரி ரசீது மற்றும் ஆதார் போன்ற ஆவணங்களை இணைத்து இருந்தேன். ஆனால் மின் இணைப்பு பாப்பா என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது, என்று மின்வாரிய பழைய உதவி பொறியாளர் திரு சண்முகநாதன் அவர்களிடம் முறையிட்டபோது, இது தொடர்பாக சரியான தகவல் ஏதும் என்னிடம் கூறவில்லை.

பின்பு அந்த எண்ணை எனது பெயருக்கு மாற்றி கேட்டேன்.மாற்றி தருகிறோம் என்று சொல்லி முதியவர் என்றும் பாராமல் ஆறு மாதகாலமாக அலையவிட்டு என்னை மன உளைச்சலுக்கும் ஆளாக்கி விட்டார்கள்.தற்போது சென்று கேட்டபோது சண்முகநாதன்  மாற்றப்பட்டு புதிய உதவி மின்பொறியாளர் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்த நம்பரை அழித்து விடுங்கள்.உங்களுக்கு வேறு எண் தருகிறோம் என்று கூறுகிறார்கள்.அப்படி என்றால் நான் ஏற்கனவே செலுத்திய மின் கட்டணத்திற்கு வழி என்ன? பாப்பா கணவர் பெயர் கருப்பையா முகவரி தலைக்கான் பச்சேரி என்ற மின்னிணைப்பு 11.3.2020 அன்று மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது என்று கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணைப்பு பாப்பா என்ற பெயரைக்கூட மாற்றாமல் எனது வீட்டிற்கு 17.3.2020 கொடுக்கப்பட்பதாக கனினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாப்பா அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகையை முறைகேடாக என்னிடம் வசூல் செய்துவிட்டார்கள்.மேலும் கடந்த ஆறு மாத காலங்களாக மின் இணைப்புக்கு மின் கட்டணம் எதுவும் என்னிடம் பெறவில்லை.நான் ஒவ்வொரு மாதமும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இதைப் பற்றி கேட்டால் உங்களுக்கு கணக்கு வரவில்லை என்று கூறி விடுகிறார்கள்.திடீரென்று ஒரு பெரும் தொகையை என்னிடம் செலுத்த சொன்னால் அதையும் என்னால் செலுத்த முடியாது. திரு சண்முகநாதன் அவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த இதர பணியாளர்களிடமே வசூல் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.எனக்கு 75 வயது ஆகிறது. எனது அறியாமையை பயன்படுத்தி என்னிடம் முறைகேடாக பணம் பெற்று, கடந்த ஆறு மாத காலமாக மின் இணைப்பின் பெயரை எனது பெயருக்கு மாற்றம் செய்து தராமல் அலைக்கழிப்பு செய்த தற்பொழுது பணி மாறுதல் செய்யப்பட்ட பழைய உதவி மின் பொறியாளர் திரு சண்முகநாதன் அவர்கள் மீதும் உடந்தையாக இருந்த இதர பணியாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு உடனடியாக 3 PHASE மின் இணைப்பினை எனது பெயரில் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.