Home செய்திகள் கீழக்கரை கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் துவக்கம்..

கீழக்கரை கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் துவக்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.30 – இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் நிறுவப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து பேசுகையில் செய்யது ஹமிதா கல்லூரியில் தொடங்கிய ரோட்டரி கிளப் மூலம் தலைமைப்பண்பு தனித்திறன் மேம்பாடு, கூர்நோக்கு சிந்தனை, சமுதாயப் பணி ஆகிவற்றில் மாணவ மாணவியர்  தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமையும் என்றார். 

மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் தினேஷ் பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவர் அருனேஷ், துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் ஆகியோர் பேசினர். கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலர் எபென் பிரவீன்குமார், மருத்துவர் ராசிக்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியின் ரோட்டரி கிளப் ஆளுநராக மாணவர் சபியுல்லா மற்றும் இதர நிர்வாகிகள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ராமநாதபுரம், கீழக்கரை ரோட்டரி நிர்வாகிகள், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி ரோட்டரி சங்க அமைப்பாளர் பேராசிரியர் சதாம் உசேன் செய்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com