இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில்  மாடி தோட்ட பயிற்சி..

இராமநாதபுரம் தேசிய பசுமைப்படை, தோட்டக்கலை துறை மாடித்தோட்டம் அமைப்பது குறித்து ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் 24.08.2018 இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சோமசுந்தரம்,  முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எஸ்..நந்தகோபால் ஆகியோர்  முன்னிலை வகித்தார்.

இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை அலுவலர் முனைவர் என்.ஸ்ரீமீனா கருத்தாளராக பங்கேற்று மாடித்தோட்டம் அமைத்தல், அதன் பயன்பாடு குறித்து கருத்துரை வழங்கினார். மாடித்தோட்டம் அமைப்பது பற்றி பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.தீனதயாளன் விளக்கினார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியின் முடிவில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் தங்கள் பள்ளிக்கு இரண்டு GROW BAG KIT வாங்கி சென்றனர்.  இந்த நிகழ்வுக்கா ஏற்பாடுகளை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட் செய்திருந்தார்.

#Paid Promotion