அரியூர் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெறும் பகுதியில் மாற்று பாதை துவக்கம் ..

வேலூர் மத்திய மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி அரியூர் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது ஆகையால் அவசர நேரத்திற்கு இரு சக்கர வாகனம் செல்வதற்காக மாற்று பாதை அமைத்து தரும்படி பொது மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

அதை ஏற்று இன்று ரயில்வே துறை ஊழியர்கள் உதவியுடன் மாற்று பாதை அமைத்து தந்து அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் சென்று பாதை திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் அந்த பகுதி சேர்ந்த பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து MLA அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். அவருடன் பகுதி செயலாளர் R.K.ஜயப்பன் அவைத்தலைவர் A.G.ஆறுமுகம் அல்லாபுரம் பகுதி செயலாளர் C.M தங்கதுரை A.P.ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.