இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிகள் கருத்தரங்கு..

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் 30 வது சாலை பாதுகாப்பு வார விழா  பிப்., 4 முதல் பிப்., 10 வரை கொண்டாடப்படுகிறது. ” சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ” என்ற பொன்மொழிக்கேற்ப இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் காமினி உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் அறிவுறுத்தல்படி, காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் வழிகாட்டுதல்படி சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது. காவல் ஆய்வாளர்கள் தனபாலன் ( பஜார்), கலாராணி ( டவுன்), சார்பு ஆய்வாளர் சிவசாமி, ஜோதி முருகன் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சக்தி வேல் முத்து, ஏட்டு கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி ஆயிர வைசிய மஹாலில் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், திருவாடானை பிஎம் ஆர் மஹா லில் காவல் துணை கண்காணிப்பாளர் (மது விலக்கு பிரிவு) அறிவழகன், முதுகுளத்தூர் ஜி எம் மஹாலில் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடந்த போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் வாகன ஒட்டுநர்கள் கலந்து கொண்டனர்.