குண்டும் குழியுமான சாலையை சீரமைத்திட மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், துத்திகுளம் ஊராட்சி,துத்திகுளம் இங்கிருந்து வயல் வெளியாக V.K.புதூர் செல்லும் சுமார் 4கி.மீ. வரை தார்ச்சாலை உள்ளது. இந்தச் சாலை போடப்பட்டு சுமார் 13வருடங்கள் ஆகிறது. தற்போது இந்தச் சாலை உருக்குலைந்து குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

வாகனங்களே செல்ல இயலாத நிலையிலுள்ள இந்த சாலை வழியாக சுரண்டை, மற்றும் V.k.புதூர் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர்பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுநலன் கருதி மக்கள் நலன்காக்கும் இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்