மூன்று மாதத்திற்கு பின் பாம்பன் ரயில் வழியாக இராமேஸ்வரம் வந்த ரயில்கள் உள்ளூர், வெளி மாநில பயணிகள் மகிழ்ச்சி.

மூன்று மாத காலத்திற்கு பின் ராமேஸ்வரத்திற்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில் சேவை இன்று துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜல சந்தி கடற்பகுதிகளில் தமிழகத்துடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இது. இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்களில் 144 கர்டர்கள் பாம்பன் ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன.

கடந்த 1914ம் ஆண்டில் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது 104 ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலைகொண்டுள்ள இப்பாலத்தின் நடுவில் தூக்கு பாலத்தில் கடந்த 2018 டிச., 4ல் தொழில் நுட்ப கோளாறு ஏற்ப்பட்டது . இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு பணி நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இந்திய ரயில்வே உயரதிகாரிகள் தூக்கு பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர். இதன்பின் அனுமதியையடுத்து மூன்று மாத த்திற்கு பின் இன்று அதிகாலை 2:00 மணி முதல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக 10 கி.மீ., மி வேகத்தில் பயணிகளுடன் வாரணாசி விரைவு ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதே போல் ராமேஸ்வரத்தில் – மதுரை பாசஞ்சர் ரயில் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் சேவை துவங்கியதால் தீவு மக்கள் மற்றும் வெளி மாநில பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . இன்று முதல் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பிப்., 25 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

#Paid Promotion