மெத்தனப் போக்கில் நெடுஞ்சாலை துறை.. விபத்தை தடுக்க பாடுபடும் காவல்துறை..

மதுரை மாவட்டம் பசுமலை அருகே பல மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறிய கால்வாய் பாலம் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதி மட்டுமே பல மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. காவல்துறை விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது எனினும் நெடுஞ்சாலைத்துறை அலட்சியப் போக்கினால் இரவு நேரங்களில் விபத்துகள் நடக்கிறது.

மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. மேலும் சட்டமன்ற உறுப்பினரின் வீடு அருகே இந்த அவலம். விரைவில் இந்த சிறிய பாலத்தை கட்டி முடித்து விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகமும் தேசிய நெடுஞ்சாலையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்