Home செய்திகள் வேடர்புளியங்குளம் ஊராட்சியில் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

வேடர்புளியங்குளம் ஊராட்சியில் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கையற்கன்னி நகர் பகுதியில் மீனாட்சி நகர் விரிவாக்கம் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அடிப்படை தேவையான சாலை வசதி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “அடிப்படைத் தேவையில் ஒன்றான சாலை வசதி இந்த பகுதியில் பூர்த்தி அடையாமல் உள்ளது. பொதுமக்கள் சென்று வருவதற்கு எதுவாக தார் சாலை அமைக்கவில்லை. மண்பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது சாலை சேறும் சகதிமாக மாறி விடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருவதுடன் பொதுமக்களும் அதில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.மேலும் இதன் அருகே ஊராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால் இங்கே கொட்டப்படும் குப்பை கழிவுகள் மழை நீரில் கலந்து நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மீனாட்சி நகர் விரிவாக்கம் பகுதியில் தரமான சாலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com