Home செய்திகள் உத்திரகோசமங்கை கடைகளில் சிக்கன் வறுவல் பறிமுதல்

உத்திரகோசமங்கை கடைகளில் சிக்கன் வறுவல் பறிமுதல்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அறிவுறுத்தல் படி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் ஆலோசனை படி கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், பரமக்குடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ஆகியோர் திருப்புல்லாணி வட்டாரம் உத்தரகோசமங்கை நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர். அனைத்து கடைகளில் உரிமம், பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கலப்பட டீத்தூள், எண்ணெய் மறு பயன்பாடு, கோழி இறைச்சி வறுவலில் வண்ணப் பொடி அதிகம் பயன்படுத்தக் கூடாது, வடை, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் பலகார தயாரிப்புகளை கண்ணாடி கூண்டில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அனைத்து கடை உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டது.வண்ணப்பொடி அதிகம் சேர்த்து வறுத்து திறந்த வெளியில் விற்பனைக்கு வைத்திருந்த கோழி இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!