Home செய்திகள் ராமநாதபுரம் லோக் சபா தேர்தலில் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டி?

ராமநாதபுரம் லோக் சபா தேர்தலில் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டி?

by mohan

வரும் 2024 லோக் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டியிட திமுக கூட்டணியில் சீட் கேட்டு வலியுறுத்துவோம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்முகைதீன் கூறினார்.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்முகைதீன் வந்திருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:. திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு தொகுதி மக்களிடம் நற்பெயர் உள்ளது. இதனை கூட்டணி கட்சியினரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் 2024 லோக் சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டியிட சீட் ஒதுக்க கோரிக்கை வைப்போம். இதன் முடிவை திமுக தலைமை தான் இறுதி செய்யும். மக்களின் விருப்பத்தை திமுக தலைமையிடம் எடுத்துக் கூறுவோம். சமீபத்திய மழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு வக்ப் வாரியம்,பள்ளிவாசல்கள் சார்பில் தலா ரூ30 லட்சம் நிதி வழங்க உள்ளோம். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து எம்பிக்கள் 146 பேரை வெளியேற்றிய சம்பவம் உலகில் எங்கும் நடந்திராதது. நிறைவேற்றிய சட்டங்களை எதிர்கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றன. தென் மாவட்ட மழை சேதம் குறித்த கேள்விக்கு வானிலை ஆய்வு மையம் மீது குறை கூறமுடியாது. இயற்கையாக நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமரிடம் முதல்வர் பேசியதை தொடர்ந்து அனைத்து உதவிகளும் செய்து தருவதாக கூறியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் கோரிக்கையும் அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். நவாஸ் கனி எம்.பி., உடனிருந்தார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!