சேது நாட்டு சிறப்பும், செம்பி நாட்டு புகழும் பாண்டி நாட்டு செல்வமும், சோழ நாட்டு செளிப்பும், சோனகரின் பலமும் ஓரு சேர வீற்றிருந்த வகுதாபுரியின் தலை நகரும் அதன் பலமாய் வீற்றிருந்த துணை நகர் சிலவும், புறநகர் பலவும், உலகை வியக்க செய்த கடல்கோட்டையையும் ஆராய, இந்நாட்டின் தொன்மை, வாழ்கை முறை, கலாச்சாரம், பழக்க வழக்கம், கட்டிட கலையென பல ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்வம் காட்டும் புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள். கீழக்கரையை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கீழக்குகரை (மாபர்) யின் தொன்மையும் கீர்த்தியும் உலகம் அறிந்த விசயம். ஆனால் அவை திரிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்ட நிலையில் உலக பல்கலை கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆதாரங்களை தேடி படையெடுப்பு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதன் வரிசையில் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர் ஹரினி கடந்த நான்கு நாட்களாக கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பார்வையிட்டார்.
சென்னையை பூர்வீகமாக கொண்ட ஹரினி குவைத்தில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். இஸ்லாமியர்கள், சூஃபிகள் மீது ஈடுபாடு கொண்ட இப்பெண்மனி தென் இந்தியாவில் இஸ்லாம் வந்த காலம், தமிழ் மக்களை ஈர்த்த நற்பண்புகள், தமிழ் மண்னர்களுக்கு உதவிய கடல் வணிகம், வர்த்தகம், வீரம், போர் தந்திரம், இந்தோ-சாசனிய கட்டிடகலை வடிவமைப்பு, கலாச்சாரம், நற்போதனைகள், இன்றளவும் வீற்றிருக்கும் பழக்க வழக்கம், மாற்று கொள்கை சகோதர்களுடான நட்பு என பலவகையில் ஆய்வுகள் மேற்கொன்டதாக அவருக்கு உதவிய வரலாற்று ஆராய்ச்சியாளர் அபுசாலிஹ் தெரிவித்தார்.
மேலும் இப்பயணத்தின் போது கீழக்கரை, இராமநாதபுரம், இராமேஸ்வரம், ஏர்வாடி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார்.
தகவல் உதவி:- அபு சாலிஹ்
1 comment
Well done Aboo
Good job
Comments are closed.