பணிகள் முடியும் தருவாயில் உள்ள அம்மைய நாயக்கனூர் காவலர்கள் குடியிருப்பை உடனே திறக்க காவல்துறையினர் எதிர்பார்ப்பு!..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையில் 5 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 18க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு காவலர் குடியிருப்புகள் கட்ட 3 கோடியே 54 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்தது அதன்படி அம்மைய நாயக்கனூர் காவல்நிலையம் கட்டிடம் அருகிலேயே குடியிருப்புகள் கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே அதனை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பணிச்சுமைகளை குறைக்க வேண்டும் என்பது அங்கே பணிபுரியும் காவலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

செய்தி:- ஜெ.அஸ்கர்