Home செய்திகள்உலக செய்திகள் அவசியமில்லாத பயணத்தை தவிர்க்கவும்… கொரோனோ தொற்றை தவிர்க்கலாம்… விடுதலை சிறுத்தை கட்சி துபாய் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்..

அவசியமில்லாத பயணத்தை தவிர்க்கவும்… கொரோனோ தொற்றை தவிர்க்கலாம்… விடுதலை சிறுத்தை கட்சி துபாய் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்..

by ஆசிரியர்

மே 3ஆம் தேதிக்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய பொது அடைப்பை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நோய் தொற்று பரவாமல் இருப்பதற்க்கு இந்த நடவடிக்கை தேவையானது தான் இந்த நேரத்தில் கொரானா முன்னேச்சரிக்கை காரணமாக சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் எந்த அவசியமின்றி தயவு செய்து செல்ல வேண்டாம் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

மூன்றாம் கட்டமான சமூக பரவலை நாம் சந்திக்காத இந்த சூழ்நிலையில் கொரானோ எனும் இந்த கொடிய நோயை நாம் இந்த நேரத்தில் ஒன்றினைந்து வெல்ல வேண்டும். புலம்பெறுவது என்பது நமக்கு கொரனா தொற்று அதிகம் பரவ காரணாமாக அமையும் என்பதால் நாம் இந்த காலகட்டதில் எந்த அவசியமின்றி சொந்த ஊருக்கு செல்வதை தவிர்த்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்

இந்த ஊரடங்கானது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டு இருக்கிற இந்தருவாயில் நமக்கு நாமே அதாவது நமது அண்டை வீட்டார்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி புரிந்து நமது தமிழரின் பண்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள். இறைவனுக்கு மிகவும் பிடித்த விசயத்தில் இதும் ஒன்று பக்கத்து வீட்டார்கள் பசியை தீர்ப்பதென்பது.

முழு அடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

இந்த அசாதார சூழலிலும் நமக்காக தனது சொந்த குடும்பத்தை விட்டுவிட்டு கொரனா தொற்றை அழிக்க படும்பாடுபடும் நமது சொந்தங்களான காவலர்களுக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் மருத்துவ பணியாளர்கள்ளுக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, மண்டல ஒருகிணைப்பாளர் இசபே (துபாய்) நெய்னா அசாருதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!