Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை வம்சாவளியை அறிந்து கொள்ள ஒரு போட்டி… KECT ரமலான் போட்டி அறிவிப்பு.

கீழக்கரை வம்சாவளியை அறிந்து கொள்ள ஒரு போட்டி… KECT ரமலான் போட்டி அறிவிப்பு.

by ஆசிரியர்

கடந்த 10 ஆண்டுகளாக புனித ரமலான் மாதத்தில் கீழக்கரை அளவிலான கட்டுரை போட்டிகள், மதரஸாவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனி தனி தலைப்பிலும், பொதுவான தலைப்பிலும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

அதை போல் இந்த ஆண்டும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அசாதரமான சூழ்நிலையில் மக்கள் வீட்டை வெளியே செல்ல முடியாத நிரையிலும்.  சகோதரத்துவத்தை அதிகப்படுத்தவும், நம் முன்னோர்கள் பற்றி அறியவும்,   கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்து உள்ளது. அதன் விபரம் கீழே:-

“வம்சாவளியினரை அறிவோம்” “ANCESTRY FAMILY TREE”. இப்போட்டியில் நமக்கு முன் சென்ற குறைந்தது 7 தலைமுறையினரை பற்றி தொகுத்து ஓட்ட விளக்கப்படம் (Flow chart) வடிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்துடன் கீழ்கண்ட பொது போட்டிகளும், அதன் தலைப்புகளும்..

போட்டி தலைப்புகள்

பெண்கள் : 1. பொதுப் பெண்கள் – தூய்மை ஈமானின் பகுதி. 2. மதராஸா மாணவிகள்- சுன்னாவின் முக்கியத்துவம், அந்தஸ்து. 3. மதராஸா ஆசிரியர்கள் – இமாம் முஹம்மது நாசிருதீன் அல்-அல்பானீ (ரஹ்) வரலாறு.

ஆண்கள் :

1. பொதுப் பிரிவு – இஸ்லாமும் இன்றைய கலாச்சாரமும்.

2. மதராஸா மாணவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள்.

3. 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு – அரபு எழுத்து பயிற்சி. தலைப்பு – சூரா முஃமினூன் (அத்தியாயம் 23) 1 முதல் 16 வசனங்கள்.

பொதுப்பிரிவு : 1. அனைத்து மக்களுக்குமான போட்டி – வம்சாவளித் தேடல் (ANCESTRY FAMILY TREE)

விதிமுறைகள் :

– கட்டுரை வடிவில் நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இருக்க வேண்டும்

– நீலம் மற்றும் கருப்பு பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், பிற வண்ணப் பேனாக்கள் பயன்படுத்தக் கூடாது

– நீங்கள் எழுதும் கட்டுரையானது அந்த அந்த பிரிவில் குறிப்பிட பட்டிருக்கும் பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

– விளக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

– நீங்கள் எழுதும் முன்பக்க வடிவம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

– மதரஸா ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவிகள் முன்பக்க தாளின் விதிமுறைகள்.

1. பெயர் 2. மதரஸா பெயர் 3. தலைப்பு 4. தொலைபேசி எண் 5. கையொப்பம்.

– மதரஸா அல்லாதவர்களின் முன்பக்கத் அவளின் விதிமுறைகள்

1. பெயர் 2. தெரு 3. தலைப்பு 4. தொலைபேசி எண் 5. கையொப்பம்

– முன்பக்கத்தில் எழுதப்படும் விவரங்கள் கட்டுரையில் வேறு எப்பகுதியிலும் இடம்பெறக்கூடாது.

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.05.2020 மாலை 06.00 மணி

வம்சாவழி தேடல் போட்டிக்கான விதிமுறைகள்:

1. Chart அல்லது Digital முறையில் இருக்க வேண்டும். 2. எந்த புகைப்படங்களும் இடம்பெற கூடாது. 3. அதிகமதிகம் தலைமுறைகள் எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்படும். 4. எந்தவித அடித்தலும் திருத்தலும் இன்றி தெளிவாக வரையப்பட்ட வேண்டும்.

குறிப்பு : – அனைத்துக் கட்டுரைகளையும் ஸ்கேன் ( SCAN) செய்து PDF வடிவில் பின் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

– நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] மேலும் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு

இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு:-

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT)மன்சூர் (தலைவர்): +91 9790848139 பேராசிரியர்.ஆஸிஃப்: +91 9942274187 நபிஃல் : +91 9894054547

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!