கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா..

கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிpயில் 70வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் நிஜாமுதீன் MD (Paediatric) அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புறை நிகழ்த்தினார். சீதக்காதி அறக்கட்டளை செயலாளர்  காலித் புகாரி இவ்விழாவிற்கு தலைமையேற்றார். பள்ளி முதல்வர் சாஹிரா பானு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். சீதக்காதி அறக்கட்டளை துனை பொது மேலாளர் சேக் தாவுத் கான் அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.