ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் ரோபோ கண்காட்சி …

பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆண்டிராய்டு ரோபோ நிறுவனத்தின் சார்பாக ரோபோ வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் குறித்து கடந்த ஒரு வருடமாக பயிற்சி அளிக்கப்பட்டு செயல் வழி மூலம் மாணவர்கள் உருவாக்கிய ரோபோக்கள் கண்காட்சியில் இன்று வைக்கப்பட்டது.

இக்கண்காட்சியை டாக்டர் நிஜாமுதீன் அவர்கள் துவக்கி வைத்தார். சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் A K புஹாரி, பள்ளி முதல்வர் சாஹிரா பானு, சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக் தாவுத் கான் ஆகியோர் மாணவர்கள் உருவாக்கிய ரோபோக்களை பார்வையிட்டு மாணவ மாணவியர்களை பாராட்டினர். இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை ஆண்ட்ராய்டு ரோபோ நிறுவனத்தின் நிறுவர் பிராசந்த் அவர்களும், அவர்களின் தலைமையிலான குழுவும் சிறப்பாக செயல்படுத்தித்தந்தனர்.