கைராத்துல் ஜலாலியா மேனிலை மற்றும் தொடக்கப்பள்ளியில் 72வது குடியரசு தின விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி மட்டும் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்ச்சி கிராத் வாஹிது ஆலீம் ஓதி தொடங்கிவைத்தார். பள்ளியின் முன்னாள் தாளாளர் S.M.ஜவஹர் சாதிக், பள்ளியின் தாளாளர் S.M.N.செய்யது அப்துல் மத்தின் முன்னிலையில். கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமா அத் தலைவர் ப.அ.சேகு அபுபக்கர் சாகிபு தலைமையில் மற்றும் ஜமா அத்தார்கள். நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள் தலைமையாசிரியர். ஆசிரிய ஆசிரியைகள். மாணவ மாணவிகள் முன்னிலையில் சன்சைன் டிராவல்ஸ், சன்சைன் ஹஜ் சர்விஸ், உரிமையாளர் M.S.முஹம்மது நவ்சாத் தேசிய கொடியை ஏற்றினார்கள். மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். முகம்மது அஜிஹர்.கிழக்குத் தெரு ஜமா அத் துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதே போல் கைராத்துல் ஜாலாலியா தொடக்கப்பள்ளியிலும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.