கீழக்கரை மஹ்தூமியா பள்ளியில் 72வது குடியரசு தின விழா..

கீழக்கரை மஹ்தூமியா தொடக்க பள்ளியில் 72வது குடியரசு தின விழா பழைய குத்பா பள்ளி ஜமா அத் தலைவர் செய்யது அப்தாகிர் தலைமையில்,  மஹ்தூமியா தொடக்க பள்ளியின் தாளாளர் ஜனாப். மீரா சாகிபு தொடக்க பள்ளியில் தேசிய கொடியினை ஏற்ற மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளி தாளாளர் S.இப்திகார் ஹசன்  மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்றினார்.

இவ்விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன்  ஜமா அத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன்,  ஜமா அத் துணை செயலாளர் உபையத்துல்லா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி A.முகம்மது ரிஸ்வானா வரவேற்புரையுடன் தொகுத்து வழங்கினார். மேலும் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி M.லலிதா  வரவேற்புரை வழங்கினார். மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.K.இராமமூர்த்தி  நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் ஜமா அத் உறுப்பினர்கள் மற்றும் இருபள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்