விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம்..

விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இனறு (30.03.2018) தமிழ்நாடு அரசின்சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 259 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமை வகித்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தசி.முத்துமாரி, இராமநாதசுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மன்னர் என்.குமரன் சேதுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, மகளிர் திட்ட அலுவலர். கோ.குருநாதன, வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் இந்திராகாந்தி, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, சமூக பாதுகாப்புத் திட்ட தணித்துணை ஆட்சியர் ஆ.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, மாமன்னர்ர ரிபெல்ம முத்துராமலிங்க சேதுபதி மகக்ள் இயக்கபிரதிநிதிகள் ஜே.வி.சி.சுப்பிரமணியசாமி, தஎஸ்.கோபால், பி.இராஜேந்திரன், ஏராளமான அரசு அலுவலர்கள், மாமனன்ரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசுதாரர்கள், பயனாளிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..