Home செய்திகள் இராமேஸ்வரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்,காய்ச்சல் பரிசோதனை முகாம்கள்

இராமேஸ்வரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்,காய்ச்சல் பரிசோதனை முகாம்கள்

by mohan

இராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (19.6.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா நேரில் சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறையின் சார்பாக நடத்தப்பட்ட காய்ச்சல்பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 668 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 481 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 24 நபர்களும், பரமக்குடிஅரசு மருத்துவமனையில் 15 நபர்களும், தனியார் மருத்துவமனைகளில் 18 நபர்களும் சிகிச்சைபெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாககுறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கூடுதல் கவனம்பணிகளை விழிப்புடன் மேற்கொள்ள அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில்இதுவரை 1,54,425 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பாக காய்ச்சல் பரிசோதனைமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 522 காய்ச்சல்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு 14,733 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில்197 நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும்ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொரோனாதடுப்பு நடவடிக்கைகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டார், தங்கச்சிமடம் அரசுமேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக நடத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம்களை ,இராமேஸ்வரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட காய்ச்சல்பரிசோதனை முகாமை நேரில் ஆய்வு செய்தார். இராமேஸ்வரம் அரசுமருத்துவமனையிலும், நகர்ப்புற சுகாதார நிலையத்திலும் நேரடியாகச் சென்று மருத்துவஉட்கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இராமேஸ்வரம் வட்டம், முத்துராமலிங்கத் தேவர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும்நியாயவிலைக் கடைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாகச் சென்று,இரண்டாம் தவணை நிவாரணத் தொகை ரூ.2000, மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, இராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு. பொற்கொடி,மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.மரகதநாதன், மருத்தவ நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ)மரு.சிவானந்தவள்ளி, நகராட்சி ஆணையாளர் ராமர், வட்டாட்சியர்கள் மார்ட்டின்,அப்துல் ஜபார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com