
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் எஸ்டிபிஐ., சார்பில் மீனவர் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற கிழக்கு தொகுதி தலைவர் கே.நவ்வர் ஷா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். தொகுதி துணை தலைவர் எஸ்.ஷேக் அப்துல்லா வரவேற்றார். மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ஜமீல் பேசினார். விசைப்படகுகளுக்கு அரசு வழங்கும் 1,800 லிட்டர் டீசல் மானிய அளவை 3,500 லிட்டராக உயர்த்த வேண்டும், நாட்டுப்படகிற்கு 350 லிட்டர் மானிய டீசல் அளவை 700 லிட்டர் டீசல் மானியமாக உயர்த்தி வழங்க வேண்டும், கடல் தொழிலுக்குச் சென்று எதிர்பாரா விதமாக மரணத்தை விபத்தாக கருத்தில் கொள்ள வேண்டும், அரசு வழங்கும் விபத்து நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், விளை நிலம் வைத்துள்ள மீனவர்களுக்கு மீனவ கூட்டுறவு சங்க உதவிகள், சலுகைகளை அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச்செயலர் எம்.நிஜாம் முகைதீன் பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.எஸ்.பரக்கத்துல்லா, தொகுதி செயலர் என். நூருல் அன்வர், இணை செயலாளர் எம்.அப்துல் ஹாலிக், தொகுதி பொருளாளர் எஸ்.ஏ.எஸ்.செய்யது அலிகான், பாம்பன் நகர் தலைவர் எஸ்.நியாஸ் கான், மாவட்ட துணைத்தலைவர் சுலைமான்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹனீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பாம்பன் நகர் இணை செயலாளர் எஸ்.முகமது ஆசிப் நன்றி கூறினார்
You must be logged in to post a comment.