ராமநாதபுரத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆய்வு

புரெவி புயல் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பால், படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக வருவாய், பேரிடர் மேலாண், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் இன்று (02.12.2020) ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு தயாராக வைத்திருந்த உபகரணங்களை பார்வையிட்டார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட வருவாய் ஆ.அலுவலர் சிவகாமி, மாவட்ட கணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ. முனியசாமி, ராம்கோ சேர்மன் செ.முருகேசன், முன்னாள் எம்பி அன்வர் ராஜா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.