
திமுக., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக., சார்பில் உச்சிப்புளியில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஜெ.தௌபிக் அலி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட கவுன்சிலர் ஈஸ்வரி கருப்பையா, மண்டபம் ஒன்றிய பொருளாளர் ஹென்றி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பா.ரவிச்சந்திரன், கோவிந்தமூர்த்தி,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாலமன், ஒன்றிய பிரதிநிதிகள் பூர்ணவேல் (வாலாந்தரவை), ராஜேந்திரன் (பெருங்குளம்), ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர் (வெள்ளரி ஓடை), ஹாமில் உசேன் (புதுமடம்), மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சோமசுந்தரம்
உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தௌபீக் அலி உள்பட திமுக., இளைஞர்களிடம் மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் சாந்தினி தலைமையில் மருத்துவ பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர்
You must be logged in to post a comment.