சுரண்டை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி.

வீரகேரளம்புதூர் தாலுகாவில் மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி வழங்கினார்.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சோலைசேரி, பாரதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் பெருமாள். விவசாயியான இவர் கடந்த ஜூன் மாதம் வயல் வேலைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி இறந்தார். இவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்ச ரூபாய் அவரது குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிவாரண நிதிக்கான காசோலையை வீரகேரளம்புதூர்  தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி, கிருஷ்ண பெருமாளின் மனைவி ரம்யாவிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சோலைசேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி உடனிருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்