இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீதி மன்றங்களில் லோக் அதாலத் நடந்தது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நடந்த துவக்க விழாவிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை வகித்தார். சார்பு நீதி பிரீத்தா, கூடுதல் மாவட்ட நீதிபதி அனில் குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், தலைமை குற்றவியல் நடுவர் சிவ பிரகாசம் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, செயலர் நம்பு நாயகம் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் 13 அமர்வுகளில் லோக் அதாலத் நடந்தன. வாகன விபத்து, வங்கி காசோலை மோசடி, குடும்ப பிரச்னைகள் உள்ளிட்ட 2, 874 வழக்குகள் சமரச தீர்வு காண எடுத்து கொள்ளப்பட்டது. ஸ்டேட் வங்கியில் பெற்ற கடன் ரூ.7.45 லட்சத்திற்கு ரூ.3.40 லட்சம் செலுத்து தாக சமரசத் தீர்வு காணப்பட்டு திருவாடானை அருகே குணபாதிமங்கலம் விவசாயி தங்கவேலு ஒப்புதல் தெரிவித்தார். ஒரு மாத தவணையில் இத்தொகையை செலுத்தி விடுவதாக உறுதியளித்தார். வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட காளியம்மாளுக்கு ரூ.6.25 லட்சம் விபத்து நிவாரண தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி வழங்கினார். மாவட்டம் முழுவதும் நடந்த லோக் அதாலத்களில் 914 வழக்குகளுக்கு சமரசம் காணப்பட்டு, தீர்வு தொகையாக ரூ.2,36,79, 684 வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் செல்வராஜ், சிவக்குமார், நாக ஷர்மா, கதிரவன், கேசவன், கோபிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.