Home செய்திகள் தமிழக மீனவர்களை மோடி, அண்ணாமலை ஏமாற்றி விட்டனர் ! INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் பேட்டி ! !

தமிழக மீனவர்களை மோடி, அண்ணாமலை ஏமாற்றி விட்டனர் ! INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் பேட்டி ! !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியினை மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களுக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை, எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் மயமான 205 மீனவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முதல்வர் அளித்த உறுதி அடிப்படையில் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மீனவர்களுக்கான நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு மீட்பு மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத் தருவதாக மோடி, அண்ணாமலை, என பலரும் வாக்குறுதி அளித்த நிலையில் அதற்கான நடவடிக்கையை இதுவரை மத்திய அரசு எடுக்காத நிலையில் தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வசம் உள்ள படகுகளை மீட்டு கொடுக்காமல் மீனவர்களை ஏமாற்றி விட்டார். எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது அவர்களது வாழ்வாதாரம் மீதும் எந்த அக்கறையும் காட்டவில்லை என இதன் மூலம் தெரிய வருவதாக அனிதா ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் புதிதாக அமைய உள்ள INDIA கூட்டணி தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டி இலங்கை வசமுள்ள படகுகளை உடனடியாக மீட்கவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும் அதற்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுப்பார் என்றார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, நகர் மன்ற தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (இராமநாதபுரம்) , நாசர்கான் (இராமேஸ்வரம்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வி.வேலுச்சாமி, இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மீன்வளத்துறை பொறியாளர் கணபதி ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத் , ஜெயக்குமார் சிவக்குமார் , அப்துல்காதர் ஜெய்லாணி, மீனவர் நல வாரிய உறுப்பினர் என்.ஜெ.போஸ், பி.சேசு ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!