Home செய்திகள் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதிய விவாசாய பெண் ! மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி ஆட்சியரிடம் மனு !!

ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதிய விவாசாய பெண் ! மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி ஆட்சியரிடம் மனு !!

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மனைவி சகாயமாதா வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் மோட்டாரை 40 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொண்டதால் நெற்பயிர்கள் கருகி சாவியானது என்றும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பியை கண்டித்தும் கருகி சாவியான நெற்பயிர் மற்றும் இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்துக்கும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி பத்திரத்தோடு மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு உடன் பத்திரத்தையும் வழங்குவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் .: எனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தேன். நெல்லுக்கு அங்குள்ள ஊரணியிலிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த மோட்டார் திருடு போய்விட்டது. இது குறித்து ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மோட்டாரை திருடி சென்றவரை பிடித்து அவரிடம் இருந்து குடிநீர் மோட்டாரையும் பறிமுதல் செய்துள்ளனர் ஆனால் உரிய விசாரணை நடத்தி குடிநீர் பம்பு செட் மோட்டாரை என்னிடம் ஒப்படைக்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனதால் தன்னுடைய நெற்பயிர் முழுவதும் கருகி சாவி ஆகி போனது என்றார். மேலும் தன்னுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி திருட்டு போன மோட்டாரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்ததற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைத்து இருந்தால் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியிருப்பேன் நெற்பயிர்கள் கருவி சாவியாக போய்யிருக்காது என்று கூறி கருகிய நெற்பயிர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து பம்பு செட்டு மோட்டார் இல்லாமல் தன்னால் இனி விவசாயம் செய்ய முடியாது என்று கூறி இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்துக்கும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரத்தோடு வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!