
இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே மல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள ஊரக நூலகத்தில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இப்பணியை நீட்டிப்பு செய்ய மாவட்ட நூலக அலுவலர் கண்ணன் (பொ) ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த செந்தில்குமார், இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று முன் தினம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூ. ஆயிரத்திற்கான நோட்டுகளை மாவட்ட நூலக அலுவலர் கண்ணனிடம், செந்தில்குமார் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட போலீசார் கண்ணனை கையும், களவுமாக பிடித்தனர். ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அடிப்படையில் கண்ணனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர்.
You must be logged in to post a comment.