
இராமநாதபுரம் அருகே கூரியூர் கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல பூவைசியர் ஆரம்ப பள்ளி 94 ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி நிறுவனர் முத்துதிருளப்ப ஆசிரியரின் 53 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மினி மராத்தான் மற்றும் கபடி போட்டி நடைபெற்றது. மினி மராத்தான் போட்டி, ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் துவங்கியது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் கலந்து கொண்டனர் இந்த மினி மராத்தான் போட்டியை தேவேந்திர குல பூவைசியர் ஆரம்பப் பள்ளி செயலாளர் ஐங்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுமார் 5 கி.மீ., தூரப் போட்டி கூரியூர் தேவேந்திரகுல பூவைசியர் ஆரம்பப்பள்ளி அருகே நிறைவடைந்தது. போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. மூன்று நாட்களாக நடைபெறும் கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகளின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. கபடி போட்டி செயற்கை மைதானம் உருவாக்கி நடைபெற்று வருகின்றன கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு 15 ஆயிரத்து 21 முதல் பரிசு 10 ஆயிரத்து 21 இணையான சுழற்கோப்பை, இரண்டாம் பரிசு ரூ.8001, மூன்றாம் பரிசு ரூ.6021, நான்காம் பரிசு ரூ. 4021, ஐந்தாம் பரிசு ரூ.3021, ஆறாம் பரிசு ரூ 2021, ஏழாம் பரிசு ரூ.1021சிறந்த கேட்சருக்கான பரிசு ரூ. 521 சிறந்த ரைடருக்கான பரிசு ரூ.521 வழங்கப்பட உள்ளன கபடி போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி நிர்வாகம் செய்தது. கபடி போட்டி, மினி மராத்தான் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு நடக்க உள்ளன. பள்ளி செயலாளர் ஐங்கரன், தலைவர் ராஜன்பாபு, பொருளாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைந்து நடத்தினர். திட்ட இயக்குனர் அ. ஜெயநீதி, ராஜ்குமார் ராஜேஷ், அய்யோ கண்ணன், ரஞ்சித் குமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சி நடத்த உதவியாக செயல்பட்டனர்
You must be logged in to post a comment.