Home செய்திகள் தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊராட்சி ஒன்றியங்களை 2 ஆக பிரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊராட்சி ஒன்றியங்களை 2 ஆக பிரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

by mohan

நிலக்கோட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு கூட்டமும், புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. முருகவேல்,சேனாபதி,முருகேசன் கரோலின் மேரி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் முத்துகுமார் , மாநிலத் கௌரவத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில பொருளாளர் செல்லபாண்டி, ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி செயலாளர்களாக பணிபுரியும் பதவி உயர்வில் 20 சதவீதம் பதவி உயர்வு என்பதை 50% உயர்த்தியும், அதேபோன்று ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என தீர்மானமும், வளர்ச்சித் திட்டப் பணிகளை உரிய காலக்கெடு அளிக்காமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு கூறுவதை கைவிட வேண்டுதல், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி புரியும் உதவியாளர்களை நிரந்தரப்படுத்த காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்த முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டுமெனவும், ஊராட்சி ஒன்றியங்களில் முழு சுகாதாரத் திட்டம் , மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம், மகளிர் திட்டம் உள்ளடக்கிய சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள வட்டார அளவில் தனியாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறது. மாவட்டத் தலைமை அலுவலகங்களில் அனைத்து நிலை பணியிடங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனத்தில் புதிய திண்டுக்கல் மாவட்ட தலைவராக முருகவேல். துணைத்தலைவர் சேனாதிபதி, புதிய மாவட்டச் செயலாளராக அமிர்தராஜ், புதிய மாநிலத் செயலாளராக ராஜேஸ்வரி, புதிய . மாவட்ட பொருளாளராக கரோலின் மேரி, மாவட்ட இணைச் செயலாளராக முருகேசன், புதிய மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ராம்குமார், ஈஸ்வரி, அமைதிமேரி, பாலகிருஷ்ணன், பச்சைமுத்து, ஆறுமுகம், கார்த்திகேயன் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். படவிளக்கம்: நிலக்கோட்டை ஒன்றியத்தில் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நகலை தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு மாநிலச் தலைவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கிய போது எடுத்த படம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com