
பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 7 பள்ளிகளைச் சார்ந்த 1,565 மாணவ,மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் வழங்கினர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2019-20 வரை 1,57,659 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் (2020-21) மாவட்டத்தில் பிளல் 1 5034 மாணவர்கள், 5896 மாணவியர் என 10,930 பேருக்கு ரூ.4.31கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 1,565மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி, சோ.கருணாநிதி, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.