Home செய்திகள் பாம்பன் பகுதியில் புரெவி புயலால் சேதமடைந்த படகுகள்.மத்திய குழு அலுவலர்கள் ஆய்வு

பாம்பன் பகுதியில் புரெவி புயலால் சேதமடைந்த படகுகள்.மத்திய குழு அலுவலர்கள் ஆய்வு

by mohan

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் சேமதடைந்த மீன்பிடி படகுகளை மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திர ரெட்டி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் இன்று (29.12.2020) கள ஆய்வு செய்தனர்.வங்கக் கடலில் சமீபத்தில், உருவான புரெவி புயல் தென் தமிழகத்தில் கரையை கடந்தது. இதனையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் பல்துறை அலுவலர்கள் ராமநாதபுரத்திற்கு நேற்று வருகை தந்தனர்.மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் அசுடோஷ் அக்னிஹோத்ரி, மத்திய வேளாண் துறை அமைச்சக இயக்குநர் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனன்ஜெய் சிங், மத்திய நிதித்துறை அமைச்சக துணை இயக்குநர் அமித் குமார், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குநர் சுபம் கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக உதவி ஆணையாளர் மோகித் ராம், மத்திய மீன்வள துறை ஆணையர் பால் பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் ஜெ ஹர்ஷா ஆகியோர் அடங்கிய அலுவலர்கள் குழு, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில், மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள் பங்கேற்ற புரெவி புயல் பாதிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. , பாம்பன் கடல் பகுதியில் சேமதடைந்துள்ள படகுகள் குறித்த விபரங்களை குந்துகால் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து படகில் பயணம் செய்து மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் 27 விசைப் படகுகள், 34 நாட்டுப்படகுகள் என 61 படகுகளும், 216 விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டிருந்த 78 ஹெக்டேர் பரப்பளவிலான நெல் மற்றும் மிளகாய் பயிர்களும் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கனமழையால் பகுதியளவில் சேதமடைந்த 125 வீடுகளுக்கும், முழுமையாக சேதமைடந்த 22 வீடுகள் என 147 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டு ரூ.6,22,500 மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 10 கால்நடைகள் (மாடுகள்) உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டு ரூ.30,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ள மத்திய அலுவலர்கள் குழு மூலம் பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை அரசிற்கு சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில்புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு மூலம் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதல் ஆட்சியர் திரு.எம்.பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், மீன்வளத்துறை துணை இயக்குநர் பரிதி இளம்வழுதி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com