புரெவி புயலால் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு நீதிபதி நிவாரண பொருட்கள் விநியோகம்

வங்க கடலில் டிச.2ல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புரெவி புயலாக மாறியது. பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் எதிரொலியாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடற்கரை கிராமங்களில் வசித்த மீனவர்கள் தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.வாழ்வாதாரம் பெரிதும் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தியது. புயலால் பாதித்த மீனவர்களுக்கு 25 கிலோ அரிசி மூடை , 19 தொகுப்புகள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.இதன்படி தனுஷ்கோடி கம்பிபாடு, பழைய தனுஷ்கோடி, பாலம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் நிவாரண பொருட்களை வழங்கினார். பாம்பன் பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட தோப்புக்காடு, முந்தல்முனை பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.