சமையல் எரிவாயு விலை உயர்வுமத்திய அரசை கண்டித்து திமுக., மகளிரணி ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி திமுக., மகளிரணி சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (21.12.2020) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக., மகளிரணி மாநில துணை செயலரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, ஒன்றிய பெருந்தலைலர்கள். கே.டி.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்) , முகமது முக்தார் (திருவாடானை) . ராதிகா பிரபு (ஆர்.எஸ்.மங்கலம்), தமிழ்ச்செல்வி போஸ் (கமுதி), சத்யா குணசேகரன் (போகலூர்), முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகர், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மலைக்கண்ணு, ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் வி.சி கே.புகழேந்தி, மாநில வர்த்தக அணி துணை செயலர் முகவை கிருபானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா, மண்டபம் பேரூர் செயலாளர் டி.ராஜா, மண்டபம் ஒன்றிய முன்னாள் செயலாளர் வி.சி.கனகராஜன், பெருநாழி போஸ், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் உறுப்பினர் போஸ், மண்டபம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கலைமதி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிரணி மாவட்ட செயலர் கற்பகம் நன்றி கூறினார்.