Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட பாமக அவசர ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பாமக அவசர ஆலோசனை கூட்டம்

by mohan

வன்னியர்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தின் இரண்டாம் கட்ட போராட்டம் குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் (கிழக்கு) சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் தளபதி ராஜ்குமார், மாநில துணைத்தலைவர் சகுபர் சாதிக் மற்றும் மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலையில் நடைபெற்றது. கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தில் பாமக., தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் எ.கே.மூர்த்தி, இணை பொதுச் செயலாளர் இசக்கி அண்ணாச்சி, புதுச்சேரி மாநில பொறுப்பாளர் தன்ராஜ் ஆகியோர் காணொளி வாயிலாக ஆலோசனை வழங்கினார்.

மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தவ அஜீத் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பாமக., வினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 370 கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஒவ்வொரு ஒன்றிய செயலாளரும், ஒவ்வொரு நகர் செயலாளரும் தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை வரும் 14ஆம் தேதி பொதுமக்களின் ஆதரவு கையெழுத்துடன் கூடிய படிவம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. க்கூட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், ஒன்றியத் தலைவர் சரவணன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் அற்புதராஜ், தலைவர் சரவணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் ராவுத்தர் கனி, மண்டபம் ஒன்றிய தலைவர் சரவணமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ராஜா, மீனவர் அணி செயலாளர் முருகானந்தம், உழவர் பேரியக்கத் தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகர் தலைவர் லத்தீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெமீல் கான், மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் உசேன் மற்றும் அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com