ராமநாதபுரம் மாவட்டம்வாக்காளர் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 01.01.2021-ஐ தகுதி நாளாகக்கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் மேற்கொள்வதற்கு 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதன்படி வாக்காளர் பட்டியலில், 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயர் நீக்கம் செய்வதற்கும் 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நான்கு தினங்களிலும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ளது. மேலும் 16.11.2020 முதல் 15.12.2020 வரை அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும், உதவி வாக்குப்பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் சுருக்கத் திருத்திற்கான படிவங்கள் பெறப்படும். எனவே, இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டுள்ளார்.