
மதுரை காளவாசல் துரைசாமி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை கூட்டுவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்,உடன் மதுரை மாகராட்சி ஆணையாளர் விசாகன்,நகரப்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்,அதிகாரிகளுடன் தேங்கியிருந்த நீரில் இறங்கி தண்ணீர் அகற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்,அதனத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,மதுரையில் 300 இடங்களில் தண்ணீர் தேக்கம் அடைந்துள்ளது,மதுரையில் உயர்மட்ட பாலங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் அதிகளவில் போடப்பட்ட காரணத்தால் குடியிருப்புகள் தாழ்வான பகுதிக்கு சென்றுவிட்டனர், இதன் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது,அதனை நீக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது,முன்பெல்லாம் மழை சாதாரணமாக பெய்தது தற்போது பெய்யும் மழை அதிக அடர்த்தியுடன் பெய்வதால் கொட்டோ கொட்டென்று மழை பெய்து வருகிறது,கால் பகுதிகளில் அதிக அளவு மழைநீர் தேங்குவதால் அந்தப் பகுதிகளில் கிணறுகள் அமைத்து தண்ணீரை சேகரித்து தம் மூலமாக நீரை வெளியேற்ற 30 லட்ச ரூபாய் செலவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது,முதலமைச்சர் வந்த பிறகு தான் அதிகளவு நிதி கொடுக்கப்படுகிறது. அரசு ஊழியர் மற்றும் ஆபத்து பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக அரசு நிதி வழங்க அரசாணை வகுத்துள்ளது, அதன் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படுகிறது, நாம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது,தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கருத்து சொல்கிறார்கள்,தேர்தல் நேரத்தில் நாமும் இருக்கிறோம் என்பதற்காக ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பேசுகிறார்கள்,அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை,கமலஹாசன் சினிமா நடிகர் அவர் அரசியல் செய்ய வந்திருக்கிறார்,அவர் அரசியலை ஏதோ சினிமா சூட்டிங் போல நினைக்கிறார்,தற்போது தமிழகத்தில் பருவநிலை மாறி இருக்கிறது,மழை பெய்தால் தொடர்ச்சியாக அதிகமான மழை பெய்கிறது,வெயில் அடித்தால் தொடர்ந்து வெயில் அடிக்கிறது, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக கையாண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது போல் தற்போது சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடிமராமத்து பணி திட்டங்கள் மூலம் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளார்,கமலஹாசனுக்கு எதுவும் தெரியாது,ஏதோ பேசுகிறார் யாரோ எழுதிக் கொடுத்ததை சொல்கிறார் மாலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கிறார்,இப்படி பேசுவது நாகரீகம் கிடையாது,காங்கிரஸ் பாஜக எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு,எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துக்கூற முடியாது,எம்ஜிஆர் ஒரு தேசியத் தலைவர் உலகத் தலைவர் என பேசினார்,
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.