Home செய்திகள் ராமநாதபுரத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆட்சியர் ஆய்வு

by mohan

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (27.5.2020) நடைபெற்று வரும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று ஆய்வு செய்தார். அவர் தெரிவித்ததாவது:நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 (இன்று) தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் திருத்தும் மையமாகவும், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் மையமாகவும், பரமக்குடியில் கே.ஜெ.இ.எம். மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் திருத்தும் மையமாகவும், ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி கூடுதல் மையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 928 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 99,528 விடைத்தாள்கள் திருத்தப்படுகின்ன. விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒவ்வொரு அறைகளில் உள்ள மேஜைகள், பெஞ்ச்கள் உட்பட அனைத்து தளவாட சாமான்கள், மைய வளாகம் முழுமைக்கும் உள்ளாட்சித் துறை மூலம் காலை, மாலை என இரு முறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் ஒரு முதன்மை மதிப்பீட்டாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவி மதிப்பீட்டாளர்கள் என 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆசிரியர்கள் போதிய சமூக இடைவெளி பின்பற்றி அமர குறைந்தபட்சம் 1.5 மீ இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மைய வளாகத்தில் ஆசிரியர்கள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி பராமரிக்க போதிய தண்ணீர் வசதியுடன் சோப், கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. வெளி மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து வரும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 12 வழித்தடங்களில் சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை மேற்கொள்ள 4 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, சுகாதாராத்துறை துணை இயக்குநர் சி.அஜித்பிரபுகுமார், மாவட்ட கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி, நகராட்சி ஆணையாளர் என்.விஸ்வநாதன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!